பக்கம்:கனிச்சாறு 4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 கனிச்சாறு – நான்காம் தொகுதி


39

என்றன் பாட்டு!


 என்றன் பாட்டு நல்ல பாட்டு!
இவ்வுல கெல்லாம்
அதைப் படிக்கும்

என்றன் பாட்டு கரும்புப் பாட்டு!
இனிவரும் மாந்தம்
அதைக் கடிக்கும்!

என்றன் பாட்டே இனிய பாட்டு!
இயற்கை உலகம்
அதில் குலுங்கும்!

என்றன் பாட்டே எளிமைப் பாட்டு!
எல்லா உயிர்க்கும்
அது விளங்கும்!

என்றன் பாட்டு குழந்தைப் பாட்டு!
எல்லாக் குழந்தையும்
அதைப் பாடும்!

என்றன் பாட்டே இயற்கைப் பாட்டு!
இவ்வுல கெல்லாம்
சிலை யோடும்!

என்றன் பாட்டு பொதுமைப் பாட்டு!
எனக்கும் அதுதான்
உயர் வூட்டும்!

என்றன் பாட்டே உரிமைப் பாட்டு!
எல்லா நலனும்
அது கூட்டும்!

என்றன் பாட்டே நிலைக்கும் பாட்டு!
எல்லாப் பாட்டும்
உலகுடைமை!

என்றன் பாட்டே புதுமைப் பாட்டு!
எல்லாப் பாட்டும்
பொது வுடைமை!

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/95&oldid=1440724" இலிருந்து மீள்விக்கப்பட்டது