பக்கம்:கனிச்சாறு 5.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  67


76

இரக்கம்!


காலொடிந்த காக்கையைக்
கண்டால் மற்ற காக்கைகள்
.................................................
அதனைக் கொன்று போட்டிடும்!

நோய் பிடித்த நாயினை
நோக்கி மற்ற நாய்களோ,
பாய்ந்து வந்து துரத்துமே!
பாதி உயிரைக் கொல்லுமே!

விலங்கு, பறவை இனத்திலே
வெறுப்பும் பகையும் நிலவும்!
விலங்கு போல மாந்தரும்
வெறுப்புக் கொள்ளல் நல்லதோ?

இரக்கம் வேண்டும்! மற்றவர்க்(கு)
இரங்க வேண்டும்! அஃதிலார்
அரக்கர் ஆவர்! அன்புளார்
அகிலம் வணங்கத் தக்கவர்!

-1960

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/101&oldid=1444842" இலிருந்து மீள்விக்கப்பட்டது