பக்கம்:கனிச்சாறு 5.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  71


பையன்:கூர்ந்து சொல்வாய்! உங்கள் வாழ்வில்
குத்து சண்டை தோன்றுமோ?

சிற்றெறும்பு:நேர்ந்ததில்லை! நேர்வதில்லை!!
நாங்கள் எல்லாம் ஓரினம்!

-1960


80

இருசொல் அழகு!


பசுவை வீட்டில் வளர்ப்ப தேன்?
பச்சைக் குழந்தை அழுவ தேன்? (பாலுக்கு)

.....................................
..................................... (பாட்டால்)

மாட்டுக் கஞ்சி நிற்ப தேன்?
மடை மேடை யாவ தேன்? (கொம்பால்)

மாடிக் கேற முடிவ தேன்?
மல்லி அளந்து காட்ட வேன்? (படியிருப்பதால்)

நாடு நரகம் ஆவ தேன்?
நல்ல பேச்சு சிதைவ தேன்? (குடியால்)

இரவில் வெளிச்சம் தெரிவ தேன்?
எல்லாம் உணர்ந்து சொல்வ தேன்? (மதியால்)

ஏரி நிறைந்து வழிவ தேன்?
எருது பூட்டி உழுவ தேன்? (மழை பெய்ததால்)

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/105&oldid=1445009" இலிருந்து மீள்விக்கப்பட்டது