பக்கம்:கனிச்சாறு 5.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  73


82  எழு தம்பி!

தூங்கி இருந்தது போதும்; எழு; தமிழ்த்
தம்பியே! - இளந்
தும்பியே! - எழில்
துள்ளும் தமிழ் நலம் காத்திடு; என் சொல்லை
நம்பியே - பொற்
கம்பியே!

ஓங்கி உயர்ந்த நற் பல்கலை சேர்ந்ததுன்
நாடடா -தேன்
கூட்டா! -உல
கோர்க்கெலாம் நல்லறம் தந்ததென்(று) அப்புகழ்
பாடடா! - அதைத்
தேடடா!

ஊனில் உயிரினில் தோய்வுறச் செந்தமிழ்ப்
பாடியே! - வானம்
பாடியே! - இங்கு
உள்ள பழந்தமிழ் நூல்களை நீ, படி
நாடியே - இணை
கூடியே!

வீணர் செயலிலும் பேச்சிலும் வாழ்வினை
வீழ்த்தினாய்; - தமை
வாழ்த்தினாய்! - ஒளி
விளக்க மிலாத இருள் வழியில் உனை
ஆழ்த்தினாய் - உயிர்
தாழ்த்தினாய்!

எல்லை யிலாத அறிவியல் விண்ணியல்
கூறுவாய் - அதில்
தேறுவாய் -எனில்
எத்தும் புரட்டும் இழிசெயல் யாவிலும்
ஊறுவாய் -உளம்
நாறுவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/107&oldid=1424909" இலிருந்து மீள்விக்கப்பட்டது