பக்கம்:கனிச்சாறு 5.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  81


89

உடலுறுப்புகளின் சண்டை!


கால்:“உடலைத் தூக்கி நிற்கின்றேன்!
ஓடி ஆடிச் செல்கின்றேன்!
நடைஇல் லாமல் உழைப்பேது?
நானே பெரியவன்” - என்றது கால்!

கை: “ஓடி ஆடிப் பயன் என்ன?
உழைப்பது நானே! என்றைக்கும்
பாடில்லாமல் வாழ்வேது?
பெரியவன் நானே!” - என்றது கை!

கண்: “உழைப்பது மட்டும் யாராலே?
ஒளியைப் பெறுவது யாராலே?
பிழைக்கும் உயிர்க்கே நானேதான்
பெரியவன் என்றே அறிவீரே!”

வாய்: “உள்ளம் நினைப்பதைச் சொல்கின்றேன்
உலகில் பேசி வெல்கின்றேன்!
மெல்லல், குடித்தல், செய்கின்றேன்;
மேலோன் நானே யாவர்க்கும்!”

மூக்கு: “பேச்சுப் பேசிப் பயன் என்ன?
பார்வை காட்டிப் பயன் என்ன?
மூச்சை இழுத்துத் தருவது யார்?
மூக்கே என்பதை உணர்வீரே!”

மூளை: “நல்ல மூச்சும், சுவைப் பேச்சும்,
நன்மை தீமை நோக்குவதும்,
நல்ல பிழைப்பும், நல் உழைப்பும்,
நானே அமைப்பேன் அறிவீரே!”

காலும், கையும், வாய், மூக்கும்,
கண்ணும், மூளையும் இவ்வாறாய்
மேலும் மேலும் பேசிடவே
மிகுவாய்க் களைப்பை அடைந்தனவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/115&oldid=1444997" இலிருந்து மீள்விக்கப்பட்டது