பக்கம்:கனிச்சாறு 5.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


கண்ணுக்குப் புறஞ்சொல்வான்
கழுத்துக்குக் கருக்கரிவாள்!
களையவேண்டும் அவன்நட்பு - துன்பப்
புண்ணுக்கு மருந்திடுவான்
பொய்மைக்கா விருந்திடுவான்?
புன்னகையால் பிறகு வருந்திடுவாய்!

ஏழ்மைக்குத் துணைநிற்பான்;
இழிவுக்குக் காப்பிடுவான்;
தாழ்ச்சியில் புறம்போகான் நண்பன் - அவன்
தள்ளினும் விலகாதே!
தவிர்ப்பினும் பிரியாதே!
எள்ளினும் இகழ்ந்துதிரியாதே!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/128&oldid=1425734" இலிருந்து மீள்விக்கப்பட்டது