பக்கம்:கனிச்சாறு 5.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


108

படிப்படியாக...!


படிப்படி யாகத் துடிதுடிப் போடு,
அடியை எடுத்துவை, பாப்பா! - நீ
முடிவு வரைக்கும் நட, பாப்பா! - ஒரு
முன்னேற்றம் கண்டுபிடி, பாப்பா!

அடிப்படி யில், நடை தடைப்படி னும்,உன்
அடிப்படை விடாதே, பாப்பா! - உளப்
பிடிப்பினை விடாதே, பாப்பா இந்தப்
படிப்பினை மறவாதே, பாப்பா!

இடைப்படு வார்,சிலர்; எதிர்ப்படு வார்,சிலர்
முடைப்பட நில்லாதே, பாப்பா! - உன்
முன்காலை வாங்காதே, பாப்பா! - உள
முனைப்பில் தளராதே, பாப்பா!

குடைபிடிப் பார்,சிலர்; குழிபறிப் பார்,சிலர்;
கொள்கை மயங்காதே, பாப்பா! - நீ
கூர்த்தவிழி தாழ்த்தாதே பாப்பா -உளங்
குலைந்து வருந்தாதே, பாப்பா!

{{larger|
-1974

}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/144&oldid=1444853" இலிருந்து மீள்விக்கப்பட்டது