பக்கம்:கனிச்சாறு 5.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


110

நன்றிக்கு நாய்!


நாயி னிடத்தும்
நற்குணம் உண்டு;
நன்மையைச் செய்தால்
நன்றியைக் காட்டும்!
வாயில் லாத
உயிர்களைப் போல
தம்பி, தங்கைகளே - நாம்
வாழ்ந்து காட்ட
வேண்டு மன்றோ?
முயன்று பாருங்களே!
அன்பு செய்தால்
அணைந்து மகிழும்!
அடிக்க வந்தால்
கடிக்க முயலும்!
முன்பு செய்த
நன்மை நினைந்து
தம்பி, தங்கைகளே - நம்
முகத்தை முகரும்
நாயின் அறிவை
நினைந்து பாருங்களே!

கவளச் சோற்றின்
கடனைக் கழிக்கக்
காவல் செய்து
கடமை தீர்க்கும்!
அவலம் போக்க
உதவி னோர்க்குத்
தம்பி, தங்கைகளே! - நம்மில்
ஆர்தான் இப்படி
நன்மை செய்வார்?
அறிந்து கூறுங்களே!

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/146&oldid=1444848" இலிருந்து மீள்விக்கப்பட்டது