பக்கம்:கனிச்சாறு 5.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  133


134

பொருள்களை வாங்குவது...!


கடைத்தெருவில் கண்டதெல்லாம்
விற்றிருக்கும்; காசிருக்கும்;
கணக்குப்பண்ணித் தேவையெண்ணி
வாங்கவேண்டும்! - தம்பி,
எடைத்திருத்தம், பொருள்சிறப்பு
ஏற்றஅள வோடு,விலை
எல்லாவற்றும் பொருத்தமுண்டா
பார்க்க வேண்டும்!

ஒன்றுபத்தாய்க் கூறிடுவார்;
ஊசியதை நல்லதென்பார்;
ஒன்றிரண்டு கடைகள்ஏறி
இறங்க வேண்டும்! - தம்பி,
நன்றுபார்த்துத் தேறவேண்டும்;
நாள்படவும் காக்கவேண்டும்!
நம்மறிவே எவ்விடத்தும்
விளங்க வேண்டும்!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/167&oldid=1444923" இலிருந்து மீள்விக்கப்பட்டது