பக்கம்:கனிச்சாறு 5.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  139


அம்முப்பா அறைக்கதவு
படாரென் றோடும்!
அங்குமிசைத் தொலைபேசி
‘அலோ’ ஒலிக்கும்!
செம்மையுறும் பொத்தகங்கள்
சிதறி யோடும்!
சிக்கிவிட்ட பொருள்களெல்லாம்
பறந்து போகும்!

சதிராட்டம் கூடத்தில்
நடக்கும்! பாய்ந்தால்
தொலைக்காட்சி நடுநடுங்கும்!
திடுமென் றங்கே
எதிர்வீட்டுத் தேவி தலை
கையில் சிக்கும்;
இளங்கையில் கொத்துமுடி
இழுபட் டேங்கும்!

கடாமுடா வென் றுள்ளறையில்
ஒலிகள் கேட்கும்!
காற்றெனவே இருகால்கள்
வெளிப்பாய்ந் தோடும்!
அடா! அடா!என் சொல்வேன்? இங்(கு)
ஆடும் ஆட்டம்!
அத்தனைக்கும் தாங்கா(து)இச்
சிறுவீ(டு) அய்யா!

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/173&oldid=1444949" இலிருந்து மீள்விக்கப்பட்டது