பக்கம்:கனிச்சாறு 5.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  143


143

பெறுவதுரிமை!
பெறுவதுடைமை!


கூட்டம் கூடிக் கொட்டி முழக்கிக்
கொள்கையைப் பரப்புங்கள் - தமிழ்க்
கொள்கையைப் பரப்புங்கள்!
ஆட்டம் ஆடிப் பாட்டுப் பாடி
ஆண்ட கதை சொல்லுங்கள்! - நாம்
ஆண்ட கதை சொல்லுங்கள்!

நாட்டம் இன்றி இருந்ததனால்
நலமிழந்து போய்விட்டோம்! - நாம்
நாடோடியாய் ஆய்விட்டோம்!
பாட்டன் அப்பன் உரிமையெல்லாம்
பறிகொடுத்து நின்றிட்டோம்! - தமிழ்ப்
பண்பாட்டிலும் குன்றிட்டோம்!

சிறுவர்களே! சிறுமியரே!
சேர்ந்துவந்து முனையுங்கள்! - ஒரு
சிவப்புப் புரட்சி விளையுங்கள்!
பெறுவதுரிமை! பெறுவதுடைமை!
பெறுவோம் நில எல்லையே! - இதில்
பின்னடைவ தில்லையே!

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/177&oldid=1444953" இலிருந்து மீள்விக்கப்பட்டது