பக்கம்:கனிச்சாறு 5.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


152

செம்மை வாழ்வு!


பார்வையில் கூர்மை கொள்!
பணிகளில் சீர்மை காண்!
பற்றற்ற தொண்டினில் நேர்மைநில்!
ஆர்வமும் முயற்சியும்
அயர்வில் லாமையும்
ஆக்கத்தில் ஊக்கமும் கொண்டிடு!
நேர்வதில் மகிழ்வுகொள்!
நிகழ்வதில் முனைந்திரு!
நேரவிருப்பதில் கருத்துவை!
சேர்வன சேரட்டும்!
சிறப்பன சிறக்கட்டும்!
செம்மை வாழ்வு இதுவென நிறைவுகொள்!

-1968
 

153

வாழ்க்கை!


பதியவை மனத்தில்;
பண்பாடே செல்வம்!
புதிய உணர்வு கொள்;
புன்மை அகற்றுவாய்
முதியவர் உரைகேள்!
முழுமை அறிவுகொள்!
மதியை, உளத்தை
மலர்த்தலே வாழ்க்கை!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/186&oldid=1444962" இலிருந்து மீள்விக்கப்பட்டது