பக்கம்:கனிச்சாறு 5.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கஅ

கனிச்சாறு ஐந்தாம் தொகுதி

18. ஒன்றின் தேவைக்கிருப்பது இன்னொன்றுக்கு எப்படி உதவாமல் போகிறது என்பதைக்
குழந்தைகளுக்கு விளக்கும் அழகுப் பாடல்.
19. கடிகாரம் பற்றிய குழந்தை இசைப்பாடல்.
20. பள்ளிக்குப் போகும் குழந்தை பயில வேண்டியதைச் சொல்லும் மழலைப்பாடல்.
21. உண்மை பேசும் திருக்குறளைப் பற்றிக் குழந்தைகளுக்கு கூறும் இசைப்பாட்டு.
22. வேண்டும் பொருள் எவையெவை எனக் குழந்தையிடம் சொல்லி அதன் சிந்தனையைத்
தூண்டும் பாடல்.
23. அன்னையின் சிறப்பைச் சொல்லி அவர் யார்? என ஆசிரியர் கேட்கவும், அச்சிறப்பு
கொண்டவர் 'அன்னை' எனக் குழந்தைகள் சொல்வது போலவுமான அழகார்ந்த இசைப்பாடல்.
24. உடலின் புறத்தூய்மைக்கான நம் முயற்சி உள்ளத்தூய்மைக்காகவும் இருக்க வேண்டும்
என எளிமையாய்ச் சொல்லும் பாடல்.
25. ஒருவர்க்குப் பயன்படாத ஒருபொருள் - வேறொருவர்க்கு எந்த அளவில் பயன்படுகின்றது என்று அறிவூட்டும் குழந்தைப்பாடல்.
26. பூனை என்னவெல்லாம் செய்கிறது என்பது பற்றிய - இசைப்பாட்டு.
27. மின்சாரத்தின் பயன்களை அழகுறச்சொல்லும் இசைப்பாடல்.
28. மழையின் சிறப்பை உணர்த்தி அதை ஓடிவரச் சொல்லும் குழந்தைப் பாடல்.
29. குடையும் செருப்பும் தம்மில் எவர் உயர்ந்தவர் எனத் தத்தம் பெருமைகளையும் மற்றதன்
சிறுமைகளையும் சொல்லிய பிறகு ஒற்றுமைகாணும் சுவையான கற்பனைப்பாடல்.
30. சிலந்தி, தேனீ, எறும்பு, குருவி இவற்றின் முயற்சி வினைகளைச் சொல்லி முயற்சி என்றும்
வேண்டும் எனக் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறும் பாடல்.
31. சிற்றூர்ப்புறத்திலுள்ள மாட்டு வண்டியின் பயன்பாட்டையும், அதன் வடிவமைப்பையும்
அழகுற விளக்கும் பாடல்.
32. ஒவ்வொரு விளையாட்டையும், அதன் பயனையும் விளக்குகிற குழந்தைப்பாடல்.
33. தொடர்வண்டிபோல் தொடர்ந்து சென்று விளையாடும் குழந்தைகளின் தொடர்வண்டி
விளையாட்டின் அழகை விளக்கும் பாடல்.
34. அம்மா வராமையால் அழும் குழந்தைக்கு அதன் அழகை வண்ணனை செய்து பாடும்
தாலாட்டுப் பாட்டு.
35. அப்பாவின் செயல்களைப் பற்றிக் குழந்தை சொல்வது போன்ற இசைப்பாடல்.
36. குடும்பத்துள் யார் யாருக்கு எதன் மீது எவர் மீது ஆசை எனச்சொல்லும் இசைப்பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/19&oldid=1424429" இலிருந்து மீள்விக்கப்பட்டது