பக்கம்:கனிச்சாறு 5.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


161

நன்கு எண்ணு!
தெளிவாய்ச் சொல்! செப்பமாகச் செய்!


எண்ணத் தெரிந்துகொள்!-நன்றாய்
எண்ணத் தெரிந்து கொள்!
உண்ணும் உணவும் உடுக்கும் உடையும்
பண்ணும் செயலும் பழகும் முறையும்
எண்ணத் தெரிந்து கொள்! - நன்றாய்
எண்ணத் தெரிந்து கொள்!

சொல்லத் தெரிந்து கொள் - தெளிவாய்ச்
சொல்லத் தெரிந்து கொள்!
கல்லார் முன்னும் கற்றார் முன்னும்
வெல்லத் தமிழில் விளங்கு மாறு
சொல்லத் தெரிந்து கொள்! - தெளிவாய்ச்
சொல்லத் தெரிந்து கொள்!

செய்யத் தெரிந்து கொள்! - நன்கு
செய்யத் தெரிந்து கொள்!
கையால் செயலோ கருவிச் செயலோ,
துய்ய முறையில் செப்ப மாகச்
செய்யத் தெரிந்து கொள்! - நன்கு
செய்யத் தெரிந்து கொள்!

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/190&oldid=1444966" இலிருந்து மீள்விக்கப்பட்டது