பக்கம்:கனிச்சாறு 5.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  159


164

நாள் ஒழுக்கம்!


கதிருக்கு முன்னெழு!
கடமைகள் வரிசை செய்!
நூலொடு தொடர்பு கொள்!
நோதவிர் பயிற்சி செய்!
மயக்கிலா உண்டி கொள்!
மாண்பொடு பள்ளி செல்!

ஆசிரியர்த் தழுவு!
அன்பரில் நண்பு தேர்!
கல் கேள் பட்டறி!
கரவிலா உறவு கொள்!
மாலை உடல் பயில்!
மறாமல் கல்வி தேர்!

இரவூண் குறைத்துண்!
எதிரிரா விழித்திரேல்!
என்றும் தனிப்படு!
இடக்கைப் புறந் துயில்!
பெரியோர் வழித்தொடர்!
பெற்றவர் மகிழ்வு செய்!

-1982
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/193&oldid=1444970" இலிருந்து மீள்விக்கப்பட்டது