உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 5.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  163


170

காலத்தால் நிலைப்பதே எல்லை!


எத்தனை நினைக்கினும்,
எவ்வளவு உழைப்பினும்
இயன்றதே நாம்செய முடியும்!
அத்தனை நினைவிலும்
அத்துணை உழைப்பிலும்
ஆவதே விளைவென ஆகும்!

எண்ணமாய் உள்ளவை
உரைகளாய் வெளிப்பட
எத்துணை முயற்சிகள் தேவை!
திண்ணமாய் அவ்வுரை
செயலாய் விளைந்திடத்
திட்டம்,ஆள்,பொருள் - பல தேவை!

விளைந்திடும் செயலையே
அனைவரும் விரும்பி
வேண்டுவர் என்பதும் இல்லை!
களைந்திடும் சிலரால்;
கருகிடும் சிலரால்;
காலத்தால் நிலைப்பதே எல்லை.

-1987

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/197&oldid=1842465" இலிருந்து மீள்விக்கப்பட்டது