பக்கம்:கனிச்சாறு 5.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


171

எதிலும் சிறப்பு வேண்டும்!


கல்விக் குரிய நூல்களை மட்டும்
கற்றால் போதாது - அறிவுச்
செல்வம் பெருக்கும் நூல்கள் பிறவும்
தேர்ந்து பயிலல் வேண்டும்!

பொதுவாய் இயங்கும் இயக்கம் மட்டும்
உடலுக்குப் போதாது! - மேலும்
புதுப்புதுப் பயிற்சிகள் உடலுக்குத் தந்தே
உடலைப் பேணல் வேண்டும்!

இயல்பாய் உண்ணும் உணவுகள் மட்டும்
நலத்துக்குப் போதாது; - நாளும்
முயலும் உழைப்புக் கேற்ற உணவுகள்
முனைந்தே உண்ண வேண்டும்!

‘ஏதோ இருந்தோம் என்னவோ வாழ்ந்தோம்’
என்றே இருக்காமல் - எந்தத்
தீதும் இன்றித் தெளிவாய் வாழத்
திறனைப் பெறுதல்வேண்டும்!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/198&oldid=1444975" இலிருந்து மீள்விக்கப்பட்டது