பக்கம்:கனிச்சாறு 5.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கசு

37. பெட்டைக் கோழியையும் அதன் குஞ்சுகளின் அழகையும் காட்டும் கவினுறு காட்சியுள்ள
பாடல்.
38, ஆசையைப் படிப்பின்மீது வைத்தால் அக் கல்வி ஒளி இருளைப் போக்கும் எனப் பாப்பாவைப்
படிக்கச் சொல்லும் இசைப்பாட்டு.
39. யானையைப் பார்க்கத் தம்பியை அழைத்துக் காட்டுகிறது இவ் இசைப்பாடல்.
40. எண்ணிக்கை பயிற்சி செய்விப்பதைப் போலவே பாட்டின் இசை அமைய விளையாட்டையும் சொல்லித் தருகிறது பாடல்.
41. வானைமுட்டும் கட்டடங்கள் இருந்தாலும் பட்டினத்தின் கெடுதல்களையும்,
தொல்லைகளையும் விளக்கும் அழகான பாடல்.
42. குருவியைக் குழந்தை கொஞ்சி அழைப்பதான மழலைப் பாடல்.
43. கடலின் அழகைத் தம்பிக்குக் காட்டுகிறது இவ் இசைப்பாடல்.
44. தூய்மையிலும், உணவு உண்பதிலும் உள்ள ஒழுங்குணர்ச்சிகளைப் பாப்பாவிற்குச்
சொல்கிறது இப்பாடல்.
45. எந்திரத்தால் வண்டிகள் ஓடுகிறபோது, மாந்தரே வண்டிகளை இழுத்துச் செல்லல் சரியாகுமோ? -`தக்கவற்றையே செய்வாய், தகாதவற்றைத் தவிர்ப்பாய்' எனத் தம்பிக்கு எடுத்துரைக்கிறது இப்பாடல்.
46. பறவைகள் எழுப்பும் ஒலிகளில் உள்ள எழுத்தமைவுகளைக் குழந்தைகளுக்குக் கூறுகிற
மழலைப்பாடல்.
47. அணிமணி வகைகள் எப்படி எங்கு கிடைக்கின்றன என்பதைக் குழந்தைகட்குச் சொல்லும்
எளிய இசைப் பாடல்.
48. வீட்டில் எலிகள் செய்யும் தொல்லைகள் அனைத்தையும் அழுகுறச் சொல்லும் பாடல்.
49. வானக் கடலில் தனியாய் நிலா போவதாய் எண்ணி அதனை அழைத்து, குழந்தை
பாடுவதான இசைப்பாடல்.
 50. ஆவை( பசு மாட்டினை)ப் பேணி வளர்க்கும், வளர்ப்பு முறையை முழுமையாய்ச் சொல்லும்அழகுப்பாடல்.
51. அம்மாவின் சுட்டுவிரலைப் பிடித்து நடக்கும் மழலை பாடுவதான அழகுப்பாடல்.
52 கருங்குயில், சின்னக்குயில், சோலைக்குயில், தனிமைக்குயில், பாடற்குயில் என்றெல்லாம்
குயிலை விளித்து இனிமைத் தன்மை வாய்ந்த தமிழ் சிறக்கக் கூவச் சொல்லுவதான
குழந்தைப்பாடல்,
53. குழந்தைகளைப் பந்தாட்டம் ஆடச் சொல்லும் இசைப்பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/20&oldid=1424431" இலிருந்து மீள்விக்கப்பட்டது