பக்கம்:கனிச்சாறு 5.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


173

சிறக்கும் வாழ்வே!


கல்விநலம் பெரி(து); அதிலும்
கருத்து நலம் மிகப்பெரிது;
கருத்தை முற்றும்
சொல் விளக்கம் தரல் பெரிது;
சொன்னபடி செயல்பெரிது;
சோர்வே இன்றிப்
பல்வகையாய் மக்களுக்குப்
பயன்தொண்டாற் றல் பெரிது!
படிக்கும் போதே
செல்வழியைத் தீர்மானம்
செய்துகொண்டு நடந்தால்தான்
சிறக்கும் வாழ்வே!

-1990
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/200&oldid=1444977" இலிருந்து மீள்விக்கப்பட்டது