இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 167
174
தீர்வு செய்! முனைந்து செல்!
உண்மையும் நேர்மையும்
ஊக்கமும் ஒழுக்கமும்
உன்றனை ஈடேற்றும் படிகள்!
அண்மையோ சேய்மையோ
ஆர்வமாய் உழைத்திடு!
ஆக்கமோ பழமரச் செடிகள்!
தீமையும் நன்மையும்
இலைகளும் பூக்களும்!
சிந்தனை செய்; அது விதைதான்!
ஆமையும் முயல்தனை
அன்றைக்கு வென்றது!
அன்றன்றும் நடக்கின்ற கதைதான்!
சோர்வும் சோம்பலும்
உனைமென்று தின்பன!
சுறுசுறுப் ,பேஉனை உயர்த்திடும்!
தீர்வுசெய்; முனைந்துசெல்;
திகைத்துநின் றிடாதே!
திசைதிசை வெற்றிகள் குவித்திடும்!
-1990