பக்கம்:கனிச்சாறு 5.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

உக


69. ஒவ்வொரு உறுப்பையும் தூய்மை செய்வதால் ஏற்படும் நன்மைகளைச் சொல்லி ஒருவன் தன்னைத் தூய்மை செய்துகொள்வதால் ஒழுங்கை எங்கும் காட்டலாம் எனச் சிறுவர்க்குக் கூறுகிறது பாடல்.

70. ஆலமரத்தின் சிறப்பையும், வியப்பையும் உணர்த்துகிறது பாடல். (இப்பாடலின் எழுத்துகள் சில அழிந்தமையால் அவற்றை நிறைவு செய்ய இயலவில்லை)

71. ஈட்டம் கொடுக்கிற செடி, கொடி வகைகளை அழித்திடாததுபோல் ஆட்டையும், மாட்டையும் வெட்டி உணவாக உண்ணலாமோ - எனக் கேள்வியாய் எழுப்புகிறது இப்பாடல்.

72. இயற்கையாய் நடக்கின்ற நிகழ்வுகள் அனைத்தும் எதிராய் மாறுவதில்லை. அதுபோல் பொய் நெஞ்சினர் பிழைப்பதில்லை; மெய்யாய்யுள்ள நல்லோர் மாள்வதில்லை என்கிறார் பாவலரேறு.

73. வேல் பிடிக்கும் கையில் வீரம் உண்டு போரிட என வரிசைப்படுத்துகிற பாடலில் அன்பிருக்கும் ஒருவர்க்கு அறிவு உண்டு தெரியவே என்கிறார் பாவலரேறு.

74. விலங்குகள் ஒவ்வொன்றும் எப்படி மற்றதை அழிக்கிறது என்கிற சுழற்சியைச் சிறுவர்க்கு எளிமையாய் உணர்த்தும் பாடல்.

75. தவளை, வௌவால், குதிரை, நத்தை, வாழை, கட்டிடம் இவற்றின் பெயர்க் காரணங்கள் இவற்றின் செயல்பாடுகளிலிருந்தே வருகிறது - என்று எளிமையாய்ச் சிறுவர்க்குச் சொல்லுகிறது பாடல்.

76. விலங்குகளில் நோய்ப்பட்ட ஒன்றினை மற்றவைக் கடித்துக் குதறிவிடுவதுபோல் மாந்தன் இருப்பதில்லை. அப்படிச் செய்யாமல் இரக்கமாய் இருத்தல் வேண்டும் என்கிறது இப்பாடல்.

77. கூடு கட்டத் தெரியாத குயில் போன்றும், புற்று கட்டத் தெரியாத பாம்பு போன்றும் நாம் இருந்திடல் கூடாது எனச் சிறுவர்க்கு உணர்த்துகிறார் பாவலரேறு.

78. காந்தியிடம் கொள்கையினால் நிறைய முரண்களும் எதிர் நிலைகளும் இருந்தாலும், அவரின் எளிமையையும், பழகும் தன்மையையும் சிறுவர்கள் கடைப்பிடியாய்க் கொள்ள வேண்டி பாடல் கூறுகிறது.

79. சிற்றெறும்பிடம் அதன் செயல்ஒழுங்கை வியந்து பையன் ஒருவன் கேட்பது போலவும் அதற்குச் சிற்றெறும்பு விடை சொல்வது போலவும் அமைந்த சிறப்புப்பாடல். மாந்தரிடையே உள்ள பகைமைபோல் அவற்றிடையே இல்லை என்கிற கருத்தைச் சிறுவர்க்கு உணர்த்துகிறது பாடல்.

80. விடுகதை போன்று ஒற்றைச் சொல் விடைக்கு இரட்டைக் கேள்வியாகச் சிறுவர்களிடம் கேட்கப் பெறுகிறது இப்பாடலில்,

81. கனி இருக்கக் காயைத் தின்பதுபோல், சரியானவற்றைத் தவிர்த்து, தவறுகளைச் செய்யலாகாது எனப் பல சான்றுகளோடு கூறும் எளிமை இசைப் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/22&oldid=1424434" இலிருந்து மீள்விக்கப்பட்டது