பக்கம்:கனிச்சாறு 5.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

உ௩


94. புதியதாய்ப் பள்ளிக்கு வந்த சிறுமலர் நெஞ்சினரின் தோற்றங்களையும், உணர்வுகளையும் சொல்லி வியக்கிறார் பாவலரேறு.

95. பள்ளியில் வெற்றி, தோல்வி அடைந்த மாணவர்களின் மனநிலையையும், அதனால் செருக்கு கொள்ளவோ துவளவோ வேண்டாவென்றும் கூறிக் கல்வியின் சிறப்பை விரித்துரைக்கிறது இப்பாடல்.

96. புறநிலையில் இனிக்கப் பேசுவோர் - அகநிலையில் வேறுபாடாக இருக்கின்றனர். புறத்தே சிறப்பாக இருப்பதை மட்டும் பார்த்து ஏமாற்றமடைந்திட வேண்டாவென்பதைத் தம்பிக்கு அறிவுறுத்துகிறார் பாவலரேறு.

97. பள்ளியில் குறும்பு செய்யாமல், பொதுமை உணர்வொடு எப்படி இருந்திடல் வேண்டும் எனச் சிறுவர்க்கு அறிவு புகட்டுகிறது இப்பாடல்.

98. எவ்வெவற்றையெல்லாம் அறிந்து முன்னேற வேண்டும் என்றும், எவ்வெவற்றையெல்லாம் புறந்தள்ளி முன்னேற வேண்டுமென்றும் பட்டியலிட்டு விளக்குகிறார் பாவலரேறு.

99. பள்ளிப்பாடநூல்கள் என்று மட்டுமே இல்லாமல் ஓய்வாக இருக்கையில் என்னென்ன பயில வேண்டும்; அவற்றால் என்னென்ன பயன் பெறலாம் என விளக்குகிறது பாடல்.

100. மழையின் அழகையும் சிறப்பையும் உவமையுடன் விளக்கும் இசைப்பாடல்.

101. நூலகத்தின் தேவையையும், அதன் பயன்களையும் பாங்காக விளக்குகிற பாடல்.

102. நிலவில் முதன்முதலில் மாந்தன் சென்று இறங்கிய நிகழ்ச்சியினை அழகுற எடுத்துரைப்பதுடன் அவர்களின் அறிவியல் வளர்ச்சியை வியந்து, நாம் என்ன செய்கிறோம் - என்கிற கேள்வியை மாணவர்களிடையே எழுப்பிச் சிந்திக்க வைக்கிறது இப்பாடல்.

103. மூத்தோர் அறிவுரைப்படி நடவாமையால் வாழ்க்கை முடிவுற்ற ஆமையின் கதையை அழகுறச் சொல்லி மாணவர்க்கு அறிவூட்டுகிறது இப்பாடல்.

104. சிற்பிகள், ஓவியர், கூத்தர், இசைவாணர் ஆகிய கலைஞர்களின் கலையியல் சிறப்பைச் ௩சொல்லும் சிறப்புப்பாடல்.

105. சிறுவர்களையும் குழந்தையைக் கொஞ்சி ஆடுமாறு ஊஞ்சல் பாடுகிறார் பாவலரேறு.

106. இன்பத் தமிழ்மொழிக்கு ஏற்றமும் ஆக்கமும் பிறந்ததெனச் சொல்லி ஊஞ்சல் ஆடச் சொல்லுகிறது இப்பாடல்.

107. படிப்பறிவு இருந்தால் மட்டும் போதாது, பட்டறிவோடு உலகறிவும் தேவை என்பதை உணர்த்துகிற சிறுகதைப் பாடல்.

108. அடியை எடுத்து வைத்து முடிவு வரைக்கும் நடக்குமாறு பாப்பாவுக்குச் சொல்லுவது போன்றமைந்த பாடல் இது. அங்ஙனம் நடக்கையில் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை குறித்தும் விளக்குகிறது இப்பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/24&oldid=1424490" இலிருந்து மீள்விக்கப்பட்டது