பக்கம்:கனிச்சாறு 5.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்


152. கூர்மையுடன், சீர்மைகண்டு நேர்மையாய் முனைவதே செம்மை வாழ்வென நிறைவுகொள்ளுமாறு அறிவுறுத்துகிறது பாடல்.

153. முதியவர் அறிவுரைகேட்டும் மதியை, உளத்தை மலர்துவதே வாழ்க்கை என்கிறார் பாவலரேறு.

154. கழிவுக் குப்பைகளைச் சுவைக்கும் ஈக்கள்போல் இல்லாமல், தேனீக்களைப்போல் நல்லன உண்டு மகிழ்ந்திடும் தன்மையே உயர்ந்ததும் மகிழத்தக்கதுமாகும் என்றுரைக்கிறார் பாவலரேறு இப்பாடலில்.

155. நட்பு - பகை குறித்துச் சுருங்கச் சொல்லும் அறிவுரைப் பாடல்.

156. கடமையும் ஒழுக்கமுமே கல்விக்கு அணிகலன் என்றும் செப்பமும் முயற்சியும் தேவை என்றும் கூறுகிறது இப்பாடல்.

157. ஆர்ப்பரிக்கும் வாய்ச்சொல் அறிவுடைமையாகாது அரும்பணி ஒன்றே அறிவைக் காட்டும் அளவு - என்கிறது இப்பாடல்.

158. அழுவது கோழைமை அயர்வு கொள்ளாதே - என்றும் முழுவதும் அறிந்து கொள்ளும் முன்முடிவு செய்யாதே” என்றும் பலவாறு அறிவுறுத்துகிறது இப்பாடல்.

159. பிறரை என்னவாறெல்லாம் எண்ணுகிறோமோ அவ்வாறெல்லாம் நாமும் இருந்திட வேண்டும் என்கிறார் பாவலரேறு.

160. உருவைப் பார்த்தல்லாமல் உள்ளத்தைப் பார்த்து நட! தீய தொடர்பே இகழ்ச்சி- என்று பலவாறாய் அறிவுறுத்துகிறார் பாவலரேறு.

161. நன்கு எண்ணவும், தெளிவாய்ச் சொல்லவும், செப்பமாய்ச் செய்யவும் தெரிந்து கொள்ளுமாறு பிள்ளைகளுக்கு அறிவூட்டுகிறார் பாவலரேறு.

162. அறிவுரை, செறிவுரை, தென்புரை அன்புரை, எழுத்துரை, என்றனைத்தைக் காட்டிலும் செயலே சிறந்தது - என விளக்குகிறார் பாவலரேறு.

163. உள்ளம் தெளிந்திருந்தாலே செயலும் தெளிவுறும்; கோணல் உள்ளமோ குழம்பிய உரைதரும் நாணுறும் செயல்களை விளைவிக்கும் என்கிறார் இப் பாடலில்.

164. ஒவ்வொரு நாளிலும் செய்ய வேண்டிய ஒழுக்க நடைமுறைகளை அழகுற விளக்குகிறது பாடல்.

165. இப்பாடலில் உழைப்புக்கு விளைவுண்டு; நல்ல விளைவுக்குப் புகழுண்டு' என்று பாவலரேறு எடுத்தியம்புகிறார்.

166. உண்மைக்கு மாறாக உரைக்கப் படுபவை தீமைக்குள் அழியும் என்றுரைக்கும் பாடல்.

167.“பொய் என்னும் தீங்குணர்வைக் கொள்ள வேண்டா; திருட்டென்னும் புன்செயலைச் செய்ய வேண்டா; ஓய்வில்லா உழைப்பால் உயர்கடமை செய்க!” என்றுரைக்கும் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/28&oldid=1424494" இலிருந்து மீள்விக்கப்பட்டது