பக்கம்:கனிச்சாறு 5.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


2  எப்படி?

மிகவும் சிறிய கல்லையே
மிதக்க வைப்ப தெப்படி?
மிகவும் பெரிய கப்பலோ
மிதந்து செல்வ தெப்படி?

‘ஈனத்' துரும்பை வானிலே
எடுத்து வீசப் பறக்குமோ?
வானக் கப்பல் தரையிலே
விழாமல் பறப்ப தெப்படி?

சிறிது தொலைவில் நின்றவன்
சொல்லும் சொற்கள் கேட்குமோ?
ஒருவன் பேசும் ஒலியினை
உலகம் கேட்ப தெப்படி?
சொன்ன பாட்டை முழுவதும்
திருப்பிச் சொல்ல முடியுமோ?
பண்ணும் இசையும் தட்டிலே
பதித்து வைப்ப தெப்படி?

இரவும் பகலும் அறிஞர்தாம்
எண்ணிக் கண்டு பிடித்தனர்!
இரவும் பகலும் படிக்கிறோம்;
என்ன கண்டு பிடிக்கிறோம்!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/38&oldid=1424519" இலிருந்து மீள்விக்கப்பட்டது