பக்கம்:கனிச்சாறு 5.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  15


14  பாதையில் நடத்தல்

எப்பொழுதும் பாதையில்
இடது பக்கம் நடந்து போ!
தப்பில் லாமல் நடப்பதால்,
தடைகள் வாய்ப்ப தில்லையே!

நடந்து போகும் மேடையில்
நடந்து செல்லல் நல்லது!
கடந்து போக, இரு புறம்
கவனி; பின்பு விரைந்து போ!

படித்துக் கொண்டு நடப்பதும்,
பந்து தட்டிப் போவதும்,
இடித்துக் கொண்டு செல்வதும்,
என்றும் தீங்கு செய்யுமே!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/49&oldid=1424841" இலிருந்து மீள்விக்கப்பட்டது