பக்கம்:கனிச்சாறு 5.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


மண்ணில் இன்றும் என்றும் நீ
மறவா திருப்பது யார் சொல்?
அன்னை! அன்னை! அன்னை -என்
அன்னை! அன்னை! அன்னை!

-1969


24  உள்ளத் தூய்மை!

நாளும் நாளும் குளிக்கிறோம்;
நாளும் நாளும் அழுக்கெலாம்
மேலும் மேலும் சேர்ந்ததே!
மீண்டும் மீண்டும் குளிக்கிறோம்!

உடலில் சேரும் அழுக்குப் போல்
உணவில் சேரும் அழுக்கெலாம்
குடலில் சேர, மருந்தினைக்
குடித்து நீக்கி விடுகிறோம்!

இவ்வா றாகத் தூய்மையாய்
இருத்தல் வேண்டும் என்றுமே!
அவ்வா றாக நெஞ்சிலும்
அழுக்கைப் போக்கல் நல்லதே!

பொய்யும், திருட்டும், ஒருவன்மேல்
பொறாமை கொள்ளும் அழுக்கெலாம்
வைத்தி ருக்கும் உள்ளத்தை
வந்து சேரும் தீமையே!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/58&oldid=1424855" இலிருந்து மீள்விக்கப்பட்டது