பக்கம்:கனிச்சாறு 5.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


26  பூனை!

மியாவ் மியாவ் பூனை
மீசைக்காரப் பூனை!

கொட்டுக் காலுப் பூனை
கொள்ளிக் கண்ணுப் பூனை!

எட்டித்தாவி விரைவிலே
எலிபிடிக்கும் பூனை!

பண்டம் உருட்டும் பூனை!
பாலைக் குடிக்கும் பூனை!

உண்டு விட்டு அடுப்பிலே
உறக்கம் கொள்ளும் பூனை!

மியாவ் மியாவ் பூனை
மீசைக்காரப் பூனை!

-1969


27  மின்சாரம்!

விசையைத் தட்டி விட்டதும்
விளக்குப் பற்றிக் கொள்ளுமாம்!
விசையைத் திருப்பி வைத்ததும்
வாய்திறந்து பேசுமாம்!

விசையை முடுக்கி விட்டதும்
விசிறி நன்கு சுழலுமாம்!
விசையைக் காதில் வைத்ததும்
விளம்பும் பேச்சுக் கேட்குமாம்!

கம்பிக் குள்ளே செல்லுமாம்!
கையில் தொட்டால் கொல்லுமாம்!
தம்பி! அதுபேர் 'மின்சாரம்'
தண்ணீர் தந்த விசையாகும்!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/60&oldid=1424857" இலிருந்து மீள்விக்கப்பட்டது