பக்கம்:கனிச்சாறு 5.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  29


குடை:உனக்கும் நிழலைக் கொடுப்பேன் - இதை
உணர்ந்து கொள்வாய் நீயும்!

செருப்பு:மேலே நின்று காப்பாய் - கீழ்
மண்ணில் தங்கிக் காப்பேன்;

குடை:நமக்குள் எதற்குப் பகையே - இனி
நண்ப ராகிப் போவோம்!

-1969


30

முயற்சி!


சிலந்தி வலையைப் பாருங்கள்!
சின்னஞ் சிறிய பூச்சியே!
வளைந்து வளைந்து புதுமையாய்
வட்ட வலையைப் பின்னுமே!

தேனீக் கூட்டைப் பாருங்கள்!
திறமை யோடு ஒற்றுமை
பேணி, வீட்டைக் கட்டுமே!
பெரிய முயற்சி வேண்டுமே!

எறும்புப் புற்றைப் பாருங்கள்!
எள்ளைப் போன்ற எறும்புகள்
அருமை யான முயற்சியால்
அழகுப் புற்றைச் செய்தன!

குருவிக் கூட்டைப் பாருங்கள்!
குடுக்கை போன்று பின்னியே,
விரைவில் கட்டி முடிக்குமே!

வேண்டும் முயற்சி என்றுமே!
-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/63&oldid=1445005" இலிருந்து மீள்விக்கப்பட்டது