பக்கம்:கனிச்சாறு 5.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


மாதுளம் பூவோ? கொப்பூழோ?
மழைவான் வில்லோ? ஒளியுடலோ?
தீதிலா நெஞ்சின் பெருநினைவோ?
தென்றற் காற்றே! துயிலாயோ?

-1969


35  அப்பா!

கையிலே ஒரு குடை!
காலில் செருப்பு நடை!
மெய்யில் வெள்ளை உடை!
மெதுவாய்ப் போவார் கடை!

'அப்பா' அதற்கு விடை;
அம்மா சொல்வாள் தடை!
தப்பாமல் ஓர் வடை
தருவாள் முதுகில்; துடை;

பாடஞ் சொல்லச் செய்வார்!
படிக்கா விட்டால் வைவார்!
ஆடல் பாடல் சொல்வார்!
அன்பைக் காட்டி வெல்வார்!

வேண்டும் பொருளைச் சேர்ப்பார்!
வீட்டை என்றும் காப்பார்!
நீண்ட மீசைக் காரர்!
நம்மேல் ஆசைக் காரர்!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/68&oldid=1424868" இலிருந்து மீள்விக்கப்பட்டது