இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50 ☐ கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி
விரலை நீட்டிக் காட்டு; தமிழ்
வீரப் பெண்ணைப் போல!
குரலை உயர்த்தி மிரட்டு! - ஒரு
கோணை காட்டு பாப்பா!
அப்பா நடையைப் போல கையை
ஆட்டி நடந்து காட்டு!
உப்பு மூட்டை சுமப்பார் - அம்மா
உன்னை வாங்கிக் கொள்வார்!
-1978
56
அம்மும்மா கண்ணாடி!
அம்முப்பா பொத்தகம்!
அம்மும்மா கண்ணாடி!
அம்முப்பா பொத்தகம்!
எம்மாம் பெரியவள்
ஆகிவிட்டேன்!
இங்கே பாருடா செம்மல்! - அடி
அங்கே பாரடி கயல்!
ஆசிரியை நானாவேன்!
அனைவருமே கேளுங்கள்!
காசு ஒன்றும்
தரவேண்டாம்!
கருத்தாய்க் கேளடா செம்மல்! - இங்கே
காதைத் திருப்படி கயல்!
நாற்காலிமேல் அமருவேன்!
மொட்டானில் கால் நீட்டுவேன்!
நேராய்ப் பார்த்தால்
வெட்கம் வரும்!
நிமிர்ந்து கேளடா செம்மல்! - இதை
நீயும் கேளடி கயல்!
-1978