பக்கம்:கனிச்சாறு 5.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  61


65  மலர்த் தோட்டம்!

தோட்டம் நல்ல தோட்டம்!
துலங்கு மலர்த் தோட்டம்!
கூட்டம் ஈக்கள் கூட்டம்!
கொம்புத் தேனீக் கூட்டம்!

வெள்ளை வண்ணப் பூக்கள்!
வான நீலப் பூக்கள்!
கொள்ளை வண்ணப் பூக்கள்!
கொத்தாய் மலர்ந்த பூக்கள்!

தோட்டம் எங்கும் சுற்றி,
தேன் குடித்த பின்னை,
கூட்டில் வந்து சேர்க்கும்,
கொம்புத் தேனீக் கூட்டம்!

பூக்கள் தேனைத் தேக்கும்!
புதிய நூலைப் போல!
ஈக்கள் மொய்த்துச் சேர்க்கும்;
பள்ளிப் பிள்ளை போல!

தோட்டம் நல்ல தோட்டம்;
துலங்கும் பள்ளிக் கூடம்!
கூட்டம் ஈக்கள் கூட்டம்;
கற்கும் சிறுவர் கூட்டம்!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/95&oldid=1424891" இலிருந்து மீள்விக்கப்பட்டது