பக்கம்:கனிச்சாறு 5.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


66  ‘பிச்சை’க்காரன்

நொண்டிப் பிச்சைக் காரன்;
நொள்ளைப் பிச்சைக் காரன்;
கண்டால் அன்பைக் காட்டு!
காசும் சோறும் போட்டு!

கேட்டு வாங்கித் தின்பான்;
பிச்சைக் காரன் என்போன்!
பூட்டு உடைத்துத் தின்பான்;
திருட்டுப் பிச்சைக் காரன்!

இல்லை என்று கேட்டால்
இந்தா என்று போடு!
பல்லைக் காட்டிக் கேட்டாலே!
‘போ போ’ என்று ஓட்டாதே!

-1960


67  காக்கும்!

உடலைக் காக்கும் சட்டை!
மரத்தைக் காக்கும் பட்டை!
குடிலைக் காக்கும் பூட்டு!
குரலைக் காக்கும் பாட்டு!

நாட்டைக் காக்கும் படை!
நடையைக் காக்கும் குடை!
ஆட்டைக் காக்கும் பட்டி!
அணியைக் காக்கும் பெட்டி!

உறவைக் காக்கும் அன்பு!
ஊரைக் காக்கும் பண்பு!
இரவில் காக்கும் நாயே!
என்னைக் காக்கும் தாயே!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/96&oldid=1424894" இலிருந்து மீள்விக்கப்பட்டது