பக்கம்:கனிச்சாறு 5.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


70  ஆலமரம்!

ஆல மரத்தின் நிழலில் வந்தே
ஆயிரம் பேர் தங்கலாம்!
ஆல மரத்தின் விதையைப் பார்க்க
கடுகைப் பெரிய தென்னலாம்!

மிகவும் சிறிய விதையில் தோன்றும்
மிகவும் பெரிய மரத்தைப் போல்
மிகவும் சிறியர்_செயலை
மாநிலத்தில் _லாம்!

விரித்த கிளைகள் தாங்கி நிற்கும்
விழுதைப் போலும் உதவியைப்
புரிந்து வாழ வேண்டும் நம்மைப்
பெற்றவர்க்கு என்றுமே!

-1960


71  செய்யலாமா?

பூக் கொடுக்கும் செடியினை
பிடுங்கி எறித லாகுமோ?
காய் கொடுக்கும் கொடியினைக்
கிள்ளிப் போட லாகுமோ?

வளர்ந்து பருக்கும் மரத்தினை
வெட்டிச் சாய்க்க லாகுமோ?
குளிர்ந்த ஊற்று நீரிலே
கல்லை அடைக்க லாகுமோ?

பால் கொடுக்கும் ஆட்டையும்
பலன் கொடுக்கும் பசுவையும்
வா ளெடுத்து வெட்டியே
வறுத்துத் தின்ன லாகுமோ?

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/98&oldid=1424898" இலிருந்து மீள்விக்கப்பட்டது