பக்கம்:கனிச்சாறு 7.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  59


44

உண்மை உழைப்பு!


ஊருக்கு நல்லன செய்யும் - ஓர்
உண்மை உழைப்பின னாக,
நேருக்கு நேர்நின்று பேசும் - ஒரு
நேர்மை உளத்தின னாக,
யாருக்கும் அஞ்சுதல் இன்றி - ஒரு
யானை வலிமையி னோடு,
போருக்கென வந்து விட்டேன் - என்
போக்கில் மறுதலை இல்லை!

தேருக்கோர் அச்சாணி யாகத் - தமிழ்த்
தெளிவினைக் காப்பதென் கொள்கை!
வேருக்குள் நீர்விடும் வேலை - நான்
விரும்பும் இனநலத் தொண்டு!
பேருக்கும் பொருளுக்கும் மாயேன் - எந்தப்
பேயர்க்கும் நாயர்க்கும் சாயேன்!
பாருக்குள் உலாதரும் வேளை - என்
பணிக்குச் சடைவுகள் இல்லை!

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/104&oldid=1446099" இலிருந்து மீள்விக்கப்பட்டது