பக்கம்:கனிச்சாறு 7.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  5


பயன்படு பொருள்நான்! பலர்க்கும் உரியவன்!
வயன்படல் என்பதென் வாழ்க்கையில் இல்லை!
எதைநான் வெறுப்பது? எதைநான் விழைவது?
விதைநான்! விளைவோ விளைப்பவர் கையுள்!
அதையதை அவரே அமைத்துக் கொள்க!
கதையிலை! கற்பனை கடுகள வில்லை!
பேணாதும் பேணலும் பெற்றவர் கடமை!
வேணாதும் வேட்பதும் வித்துக் கில்லையே!

-1988
 

50

நடிப்பார் ஆட்சியுள் நானிருந்தேனே!


ஐந்து பொறிகளும்
அற்றுளம் செத்தும்,
பிய்ந்த பெருமைகள்
பீற்றித் திரிந்தும்,
உய்ந்த பிழைப்பொடும்
உய்யா வாழ்வொடும்,
நைந்த தமிழரொடு
நானிருந் தேனே!

படிப்பார் அறிவெலாம்,
பாழாய்ப் போகவும்,
இடிப்பார் கருத்துரை
இழிவுரை யாகவும்,
துடிப்பார் உள்ளம்
துவண்டுசோர் வுறவும்,
நடிப்பார் ஆட்சியுள்
நானிருந் தேனே!

-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/110&oldid=1446109" இலிருந்து மீள்விக்கப்பட்டது