பக்கம்:கனிச்சாறு 7.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  87


65

பாவாணரின் பணிநீக்கம்!


மறைமலை என்னும் மறையா மலையின்
நிறைமலை யாகியென் நெஞ்சினுள் நிற்கும்
ஒருதனி ஆசான்! உளத்தின் குரிசில்!
பெருந்தனிச் சீரே! பிழையிலாக் கொள்கையீர்!
தூய்தமிழ் காத்திடத் தோன்றித் திறல்பெறத்
தாய்நிலம் பேணும் தனிப்பெருந் தன்மையோய்!

உண்ணா மலைப்பொருள் ஊர்க்கென வாக்கிய
அண்ணா மலைப்பல் கலைக்கழ கத்தின்
நிழலிருந் தகற்றிய நீர்மையில் லாரின்
விழலறி வெண்ணி வெயிற்புழு வாகித் 10
துடித்துளம் வெந்து துயருறல் வேண்டா!
எளியவன் நெஞ்சில் இடமுண் டதனில்
அளியின் ஒதுங்கி அருள்க பெரும!

மொழிவளங் குன்றி முழுநலம் போகிப்
பழிபடு கொள்கைப் பதரெனு மாக்கள்
விழுப்பத் திறங்கி வெளிநா கரிகப்
புழுக்கத் தழுங்கிய புன்மை ஒருகால்;
சமையப் புரட்டினுஞ் சாதிப் பகட்டின்
குமைந்த புகையினும், தீமைக் குளிரிலும்
அல்லற் படூஉம் அறியாத் தமிழரின் 20
தொல்லைக் குரலொலி தோய்தல் ஒருபால்;
எனைத்திறத் தாயினும் ஏழையர் தம்மை
வினைப்படுப் பித்து விலாவை நொறுக்கி
கசக்கிப் பிழிந்து கணக்கில் பொருளைத்
தொகுத்ததன் மேலே துயில்வார் ஒருபுறம்!

இன்னபல் வாறாய் இருள்போர்த் திருக்குநம்
அன்னையின் நாட்டில் அணிவிளக் கேற்ற
உணர்வு குமிழ்த்த ஒருபெருங் கூட்டம்
உணவில் உடையில் உளங்கொளல் இன்றிப்
பனியில் வெயிலில் பகலும் இரவும் 30
நனியுழன்று தம்மின் நலத்தை நசுக்கி,
‘உரமிகுந் துள்ள உடலும் உளமும்
திருத்தமிழ் நாட்டின் திறத்துக் குதுவுக’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/132&oldid=1446183" இலிருந்து மீள்விக்கப்பட்டது