பக்கம்:கனிச்சாறு 7.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  91


67

நாவலர் சோமசுந்தர பாரதியார்க்குப் பாமலர்!


தமிழ் புகுந்த நெஞ்சிற்குத் தளர்வில்லை
உடலுக்கும் முதுமை யில்லை;
தமிழ் புகுந்த உயிருக்கும் இறப்பில்லை
நினைவிற்கும் இறுதி யில்லை;
தமிழ் புகுந்த வாழ்விற்குத் தாழ்வில்லை;
கொள்கைக்கும் சிறுமை யில்லை;
தமிழ் புகுந்த நாவலனே! தமிழோடு
கலந்தனையோ வாழ்க நன்றே!

ஆய்ந்த பல துறையிருந்தும், திறமிருந்தும்
அவைவழியிற் பொருளை ஈட்ட
வாய்ந்த பல நிலையிருந்தும், வழுவென்று
கண்டவற்றைத் தூவென் றெள்ளி
ஓய்ந்தமரும் வேலையிலும் ஓயாமல்
மாயாமல் தமிழ்த்தொண் டாற்றி
மாய்ந்திரு நாவலனே! பாவலனே!
மணித்தமிழால் போற்று வோமே!

-1962
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/136&oldid=1446188" இலிருந்து மீள்விக்கப்பட்டது