பக்கம்:கனிச்சாறு 7.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


70

வெள்ளத் துணர்வை
விளைவாக்கி வாழுங்கள்!


அன்புளமும் ஆழும் அறிவுணர்வுஞ் செந்தமிழைத்
தென்புடனே காக்குந் திறலறமும் நல்வினையும்
ஏய்ந்திருக்கும் வாய்மையும், எப்பொழுதும் ஏழையன்...
மேய்ந்திருக்கும் நந்நெஞ்சும் மேவியசீர்த் தாய்நிலத்...
பாய்ந்திருக்கும் நஞ்சைப் பதைபதைக்கப் போக்கிமுன்...
வாய்ந்திருக்கும் தொல்புகழ்க்கு வாழ்வளிக்கும் எண்ண...
தீமைக்குக் கொல்விழியும், தீந்தமிழ்க்கு வெல்வழி...
ஊமைக்குஞ் செந்தமிழ்ப்பால் ஊட்டுமொரு வல்லமை...
தேர்ந்தொருங்கே சேர்ந்திலங்கும் தேவரா சென்னு...
ஈர்ந்தமிழ் மாணவர்க்கே யாமெழுதும் பாவோலை.

தங்கள் மடலோடு தம்பி சரவணனின்
பொங்குதமிழ்ப் பாமடலும் போதரவே பூரித்தோம்.
ஆய்விற்கும் எண்ண அலைப்பிற்கும் நூல்களிடைத்...
தோய்விற்கும் ஏற்றபணித் தொல்லைக்கும் முப்பொழு...
தேய்விக்கும் போக்கும் திகழ்மனைவி மக்கட்கே
காய்விற்கும் சேய்மைக் கடைபோய் வர, வெ...
சாய்விக்கும் காற்பொழுதும் சென்றால் சலித்த
ஓய்விற்கும் உள்ள துறக்கந்தான்! இந் நிலையில்
பெற்றவர்க்கும் உற்றவர்க்கும் பேருற்ற நண்பர்
மற்றவர்க்கும் நாளும் மடல்விடுக்க வாய்ப்பதி...
ஆதலினால் மன்னியுங்கள்! அன்பர் சரவணற்கும்
ஓதி யுணர்த்துங்கள்! உண்மைநினை வுண்டிங்கு!
மற்றபடி உம்மை மறந்திங்கு நான் வாழேன்.
பெற்ற நண்பர் எல்லாம் பிழையாத நன்மணிகள்!
உள் உள்ளத்தே என்றும் ஒளிர்கின்றீர்! ஒண்டமிழ்க்கு
வெள்ளத் துணர்வை விளைவாக்கி வாழுங்கள்.
சீரில்லா வாழ்வு சிதைந்தநிலை! வந்தீரேல்
நேரில் விரிப்பேன் நிலை!

பின்குறிப்பு

செந்தமிழ்வாய்ச் சாத்தையன் செல்வி இவர்கட்கு
வந்து பிறந்தானோர் வண்டமிழ்சேர் வாயனெனச்
செய்தி யறிந்தேன்! இலெனின் உடல் நலிவால்

எய்திப் புதுவை மருந்தகத்தில் உள்ளார்!
-1962
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/139&oldid=1446193" இலிருந்து மீள்விக்கப்பட்டது