பக்கம்:கனிச்சாறு 7.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

பழகு தண்டமிழ்ப் பயனெலாங் கொளுவும் 35
கழக இலக்கியக் கவின்பே ராக்கமும்
யாப்பொடும் உரையொடும் யாத்தநூல் பலவும்
காப்பியம் உரைநடை கதைச்சுருக் கங்களும்
அகர முதலிகள் நிகண்டுகள் தம்மொடு 40
பகுபடப் பதித்த திருக்குறள் வகைகளும்
தூதுலாக் கலம்பகம் கோவையந் தாதி
ஓதரும் பரணியொடு பள்ளுகுற வஞ்சி
வெண்பா சதகம் பிள்ளைத் தமிழெனும்
ஒண்பா விலக்கிய உயர்நூல் தொகுதியும்
மெய்யறி வோங்கி மிளிருநூல் பலவும் 45
செய்முறை அறிவியல் சமயத் திருமுறை
தொல்வர லாறுகள் தொன்னாம் ஆய்வுகள்
மல்குசீர்ப் புலவர் மாக்கதை வரிசை
அறிவியல் அறிஞர்கள் அரசியல் தலைவர்கள்
நெறிமுறைப் படுத்திய மெய்வர லாறுகள் 50
கட்டுரை வரிசை கவினுறு நாடகம்
மட்டிலா வின்பம் மல்கிசை நூல்கள்
ஆங்கிலப் பெயர்ப்புகள் அறிவியல் கதைகள்
ஓங்கிய சிறப்பின் உள்ளுணர் வெழுப்பும்
தீங்கறு பனுவல்கள் சிறுவர் பாடல்கள் 55
பழமொழித் தொகுப்பொடு பல்துறை நூல்களும்
அழகுறு வடிவொடும் ஆய்வொடும் சிறப்புற
மூலமும் பெயர்ப்பும் முறைப்பட நோக்கி
ஆழமும் அகற்சியும் அருமையும் புலப்பட
உளியிட் டெழுதிய உருவமை எழுத்தினில் 60
வெளியிட் டுதவிய வினைத்திறம் பெரிதே!

பொருள்பெற லொன்றே குறிக்கோ ளாகி
இருள்நிறை நூல்பல எழுதுவித் தவற்றைத்
தப்புந் தவறுமாய்த் தாழ்மையும் கீழ்மையும்
எப்புடை நோக்கினும் இழிந்த நடையுமாய் 65
அச்சிட்டு விற்கும் அழிசினர் புலத்திடை
மெச்சும் படியமை மேலாண் மையின்கீழ்
நூலறி வோடு நுண்ணறி வெய்திய
சால்புறும் பல்துறை அறிஞரைச் சார்ந்தே
பன்னான்கு நூற்றுப் பைந்தமிழ் நூல்கள்
இந்நாள் பதித்தவிவ் வியன்கழ கத்தை
நண்ணினை யாயின் நலம்பெறும் 70
எண்ணறு நூல்களை எய்துவை நீயே!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/151&oldid=1446211" இலிருந்து மீள்விக்கப்பட்டது