உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 7.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


வெற்றிகொண்ட நம் படைஞர்க்கு வாழ்த்து!

அறம்பாய்ந்த நன்னெஞ்சம், அருள்செய் நோக்கம்,
அடிநிலமும் பிறர்வௌவ இடங்கொ டாத
மறம்பாய்ந்த வல்லுடலம், இணைந்த தோள்கள்,
வாழ்ந்திருந்த பழம்பெருமை,இவற்றை எண்ணிச்
7செறும்பார்ந்த மிகுதுணிவு! 8செற்றம் பாய்ச்சும்
செங்கண்ணார் எம்படைஞர்! அவரைப் போலும்
திறம்பாய்ந்த படைமறவர் உலகில் உண்டோ?
திசையெட்டும் புகழ்பெற்றே அவர்கள் வாழி! 13

-1971


சில அருஞ்சொற் பொருள்:

1. எஃகம் - துமுக்கிக்குண்டு 2. அஃகம் - நீர் ஊற்று 3. ஒஃகிய - இடுக்கிய 4. கைத்துமுக்கி - கைத்துப்பாக்கி 5. வேட்டெஃகம் - துமுக்கி 6. மொய்ம்பு - வீரம் 7. செறும்பு - மனச்செருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/163&oldid=1855992" இலிருந்து மீள்விக்கப்பட்டது