பக்கம்:கனிச்சாறு 7.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  119


86

அல்லிக் குளம்!


அல்லிக்குளம் எனும் அழகிய ஊரின்
எல்லையை அடைகையில் இருளும் சூழ்ந்தது!
உந்தினின் றிறங்கி ஒற்றடிப் பாதையில்
தன்னந் தனியனாய் நடந்துகொண் டிருந்தேன்.

கிழக்கு வானில் முழுநிலா கிளர்ந்து
பழக்கப்பட்ட பெருந்துணை போல
என்னொடுங் கூட இணைந்து வந்தது!

முன்னொரு தோப்பும் முடக்குங் கடந்தால்
குளம் வரும்; அப்பால் கூப்பிடு தொலைவே!
உளமெலாம் புதுமை உணர்வால் நிறைந்தது!
ஊர்புதி தன்று! நண்பரின் ஊர்தான்!
ஆர்வம் மிகுந்த அன்புடை யவர்,அவர்!
பத்தாண் டின்முன் வந்திருக் கின்றேன்!
இத்தனை ஆண்டும்நான் எங்குளேன் என்பதை
அவரும் அறியார்; அவரையும் அறியேன்!
சிவக்கொழுந் தவர்பெயர்; சிறந்த பண்பினர்!
பொதுத்தொண்டி லேயேஎம் பொழுது கழிவதால்
பழைய நண்பரைப் பார்க்கவும் ஓய்விலை!
பண்டைத் தமிழைப் பசிக்கருந்தி எம்பசிக்கே
உண்டிரு மென்றுவந் தளிப்பான் - கொண்ட
உறவாழி உள்ளத் துயர்வாழி காரை
அறவாழிக் கன்பழி ஆம்.

எள்ளல் இகழல் இணைந்திருந்த கைநெகிழ்ந்து
தள்ளல் எனுமிவற்றைத் தாம்கண்டேன் - வள்ளல்
எனப்படுவா ரைக்கண்ட தில்லை; நீ வந்தென்
மனப்படுவாய் என்றிந்நாள் மாட்டு.

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/164&oldid=1446229" இலிருந்து மீள்விக்கப்பட்டது