பக்கம்:கனிச்சாறு 7.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  125


90

ஓவியர் பெனடிக்ட்டு வாழ்க!


ஓவியர் பெனடிக் டென்றன்
உருவத்தை வரைந்த போதே
பாவிய லுருவில் அன்னார்
பண்பினை வரைய லானேன்!
மேவிய தமிழர் வாழ்வின்
மேன்மையை நினைக்கும் நெஞ்சம்!
ஆவியைத் தமிழ்மேல் வைத்தே
அடைகாக்கும் வாழ்க்கை! வாழ்க!

1974




91

தமிழின்னும் வாழ்ந்ததிங்கே!



சொல்வகையும் பொருள்வகையும் மொழியறிவால் தேர்ந்திலராய்
ஆரியர்தம் சூழ்ச்சிக் கொப்பப்
புல்வகையும் தேராத புல்லறிவோர் பயிர்வகையை
ஆராயப் புகுந்த வாறு,
பல்வகையும் பிழைபடவே பல்கலைதேர் கழகத்தின்
பேரகர முதலி யென்றோர்
சொல்தொகையைப் புறத்துமிழ்ந்து பொருள் தொகையை விழுங்கினரே
செந்தமிழ்க்குப் புறம்பாய், அன்றே!

பொய்யாயும் புனைவாயும் தம்சரக்கைப் பலவிரித்துத்
தமிழகர முதலி யென்று: (அ)வ்
வையாபு ரிக்கூட்டம் செய்ததனைப் பாவாணர்
பலவாய்ந்து வரிசை காட்டி,
மெய்யான பேரறிவால் ‘செந்தமிழ்ச்சொற் பிறப்பியல்(அ)
கர முதலி’ ஒன்று செய்யப்
பொய்யாத நாவினராய்ப் பொருளில்லாக் கையினராய்ப்
புலனழுங்கிப் புழுங்கி னாரே!
முன்மொழியாம் செந்தமிழ்க்கேஒளிசேர்க்கும் அப்பணியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/170&oldid=1446236" இலிருந்து மீள்விக்கப்பட்டது