பக்கம்:கனிச்சாறு 7.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


மூதறிஞர் செய்வதற்கே
தென்மொழியோர் திட்டத்தைப் பிறப்பித்துத் தந்திடவும்,
தீந்தமிழ்மேல் காதல் கொண்டோர்
பன்வழியாய்த் தொகைதிரட்டிப் புரந்திடவும், அப்பணியும்
பயின்றிடவும் தொடர்ந்த காலை,
வன்பழிவந் தெய்திவிடா வண்ணம்மென அரசேற்றுக்
கொண்டததை வளர்ப்பதற்கே!

[1]சிதலமைச்சர் பலரிருந்தார், ‘பக்தவச்ச லங்’கள்போல்;
செந்தமிழை அரித்தெ டுத்தார்!
[2]புதலமைச்சர் சிலரிருந்தார் ‘சுப்பிரமணி யன்’கள் போல்;
வடவர்முன் புதைந்து கொண்டார்!
முதலைமச்சர் அருட்செல்வர் செந்தமிழ்க்கும் நாட்டுக்கும்
மக்கட்கும் முழுதாய் எண்ணும்முதல் அமைச்சர்! அவரெண்ணி
முடித்தவற்றும் இப்பணியே
முதற்பணியாம்; முழுமைத் தொண்டாம்!

செந்தமிழ்க்குக் காப்பாகச் செய்கின்ற எப்பணியும்
முதற்பணியாம்; சிறந்த தொன்றாம்!
எந்தமிழ்க்குக் காப்பானார் பாவாணர்; அன்னவர்செய்
இணையற்ற பணிக்கே காப்பாய்
வந்தமர்ந்தார் முதலைமச்சர் அருட்செல்வர் என்றாலே
தமிழின்னும் வாழ்ந்த திங்கே!
வெந்தமிழ்வார் மனக்காழ்ப்பால்
இனிமேல்தான் ஆரியரும் அவரடிக்கீழ் வீழ்ந்துள் ளாரும்!

பொருட்செல்வர் பலரிருந்தார் அந்நாளில் புலவர்களைப்
புரப்பதற்கும் போற்று தற்கும்!
இருட்செல்லும் மக்களினை, எனவே, அப் புலவர்களும்
அறவழியில் ஏகச் செய்தார்!
மருட்செல்வர் அரசாண்டார் பின்னாளில்; புலவர்களும்
வாழ்க்கையின்றி மறைந்து போனார்;
அருட்செல்வர் அந்நிலையைத் தடுத்தாள முற்பட்டார்;
அரும்புலவோர் வாழ்ந்தார் இங்கே!

-1974

  1. 1. சிதல் - கறையான்
  2. 2. புதல் - புதர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/171&oldid=1446238" இலிருந்து மீள்விக்கப்பட்டது