பக்கம்:கனிச்சாறு 7.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


94  காமரா சென்னும் கடமை மாமலை!

காமரா சென்னும் கடமை மாமலை;
தாமிணை காணா அரசியல் தந்தை;
தலைமையை ஆக்கிய தகுபெருந் தலைவன்;
குலைவுறா நெஞ்சின் கோதிலா அமைச்சன்;
மக்களுக் குழைத்த மாபெருந் தொண்டன்;
சிக்கலை யிவிழ்க்குஞ் செயற்சீ ராளன்;
தமிழகத் தலைமையை வடவர்கள் ஒப்பும்
அமைவுக் குயர்த்திய ஆளுமை வல்லோன்;
எண்ணமும் பேச்சும் செயலோ டிணைந்த
உண்மை மாந்தனுக் கொருபே ருவமை; 10
தாழ்ச்சி நிலைக்குத் தலைதாழ்த் தாத
காழ்ச்செயல் மறவன்; கரும வீரன்;
உலகம் வியக்க அரசியல் வானில்
நிலவிய நேர்மைக் கொள்கை நெடியவன்;
செல்வரைச் செலுத்தி ஏழையர்க் காக்கிய
சொல்வரை யிட்ட சோர்விலா வினைஞன்;
புகழுரை விரும்பாப் பொறுமையின் குன்றம்;
இகழுரை யில்லா ஆட்சியின் ஏந்தல்;
நல்லர சாட்சிக்குத் தன்னை நாட்டிய
இல்லறந் துறந்த நல்லறத் துறவி;
ஏழையர்க் குதவிய எளிமை வாழ்வினன்;
ஊழையுப் பக்கம் ஓட்டிய திறலோன்;
இலவயக் கல்வி எங்கும் நிறுவிய
வலவன்,இவனை வாழ்த்துக நெஞ்சே!

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/175&oldid=1432765" இலிருந்து மீள்விக்கப்பட்டது