பக்கம்:கனிச்சாறு 7.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


101

புலவர் பழனி மாணிக்கத்திற்கு வாழ்த்துப்பா!


பழுத்த தமிழன் பழனிமா ணிக்கத்தின்
விழுத்தகு பாராட்டு விழாவினை எடுப்போர்
தமிழ்விழா வெடுக்கும் தகவினர் ஆவர்!
கமழ்தகும் உள்ளக் கனிவினா லன்னான்
நந்தமிழ்ப் பயிற்றும் நல்லா சிரியனாய்
செந்தமிழ் உலகம் சீர்பெற அமைந்தான்!
பழனிமா ணிக்கப் பைந்தமிழ் ஆசான்
கழனி போன்றவன் கனித்தமிழ்மொழிக்கு!
மாமழை போன்றவன் மாணவப் பயிர்க்கு!
தாமரை யொத்தவன் தனித்தமிழ் மதிக்கு!
தூய அன்பினன்; துவளாத் தொண்டினன்
பண்பினன்; வருவிருந்தோம்பும்
வாய்மையன்; மாண்பினன்
திருக்குறள் மணக்கும் வாழ்வினன்!
காண்புல வோரிடைக் கலக்கும் உறவினன்!
பொய்கல வாத பொதுமைப் பணியினன்;
வைகலும் வாழிய! வைகலும் வாழிய!
எப்புலத் துறையினும் அப்புலம்
முப்படி உயர்த்தும் மொய்ம்பினால் அவனே!

-1978
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/183&oldid=1446974" இலிருந்து மீள்விக்கப்பட்டது