பக்கம்:கனிச்சாறு 7.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


வாய்ப்பிழந்தால் சிலநூறு வரவிழக்கும்
வகையெண்ணி வண்டமிழை
வன்பகைக்கு விலைசெய் கின்ற
நாய்ப்புலவர் வாழ்கின்ற நாளினிலே
நாம்வாழும், நலிவெல்லாம்
நாவலனை நினையுங் காலைப்
போய்ப்பதுங்கும் பெற்றியனாய் புலமிக்க
போராண்மை வல்லவனாய்
பூந்தமிழைக் காவல் செய்யும்
தாய்ப்புலமை மிக்கவனாய் தறுகணனாய்
நகையாளன் வாழ்ந்திருந்தான்!
தமிழோடு வாழ்கின் றானே!

-1979
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/187&oldid=1446980" இலிருந்து மீள்விக்கப்பட்டது