பக்கம்:கனிச்சாறு 7.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  147


110

பண்ணாய்ந்த பாவாணன்!


இசையில் தனித் தமிழை
எங்கும் பரப்பி,
வசையின்றிக் காத்த
வலவன்! - திசைதோறும்
பண்ணாய்ந்த பாவாணன்!
பாடும்வா னம்பாடி!
கண்ணோய்ந்தான் யாரினிமேல்
காப்பு?

சுந்தரே சன்பாடும்
சொக்குந் தமிழிசையால்
மந்திரப் பண்ணும்
மலிந்ததே! - எந்தமிழை
யாரே இனிஇசைப்பார்?
யாரே சிலம்பொலிப்பார்?
யாரே, பண் ணாய்வார்
இனி?

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/192&oldid=1446988" இலிருந்து மீள்விக்கப்பட்டது