பக்கம்:கனிச்சாறு 7.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  159

குமரிஆ ரல்வாய் குமிழ்த்தமுத்
தம்மைக்குக் காசிநாதர்
திமிரிப் பயந்தஅப் பாத்துரை
என்னும் திருவளர்ந்து
நிமிர்த்துத் தமிழ்மொழி நீணில
மெங்கும் நிலைப்படுத்தும்
அமரிற் படுத்திங் கயர்ந்ததே
ஆரினி ஆந்துணையே!

செந்தமிழ் ஆங்கிலம் இந்தி
பிரெஞ்சு செருமனுடன்
வந்தச மற்கிரு தம்ருசி
யம்சப்பான் என்றயல்சார்
முந்துபன் மூன்று மொழிபயின்
றேபன் மொழிப்புலமை
வெந்துநீ றானதே, தாய்ப்புலம்
விம்ம வெறுமையுற்றே!

-1989



120

நெல்சன் மண்டேலா!



இருபத்தே ழாண்டுகளாய்ச்
சிறையிருந்த இனவீரன்!
உரிமையினை எல்லாருக்கும்
கருவித்தும் உணர் வெனவே
காட்டிவிளக் கம்செய்த
கடமை உரு! விடுதலைக்கே
மருவித்தம் மனைவி, மக்கள்
மனமகிழ்வைத் துறந்த நெல்சன்
மண்டேலா
எனும் பெயரோன்!
வருவித்துக் கொளல்வேண்டும்
வாலையர்கள் அவர் உணர்வை
வாழ்வுரிமை மீட்பதற்கே!

-1990
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/204&oldid=1447011" இலிருந்து மீள்விக்கப்பட்டது