பக்கம்:கனிச்சாறு 7.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  87


125

ஆறுமுகம் காட்டுகின்ற அன்புணர்வு!


ஏறுமுகம் இன்றி இறங்குமுக மும்இன்றி
ஆறுமுகம் காட்டுகின்ற அன்புணர்வு - மாறுமுகம்
இல்லாத தாய்மைக் கிணையாகும் ஏவாமற்
பல்லானும் எம்மேல் பரிந்து.

-1993


126

அன்புள்ள தெள்ளிக்குட்டி!


அன்புள்ள தெள்ளிக்குட்டி!
அம்முப்பா எழுது கின்றேன்,
அன்பு அம்மா, அப்பா, அண்ணன்
ஆயாவும் நலமா கண்ணே!
முன்புபோல் நீங்கள் எல்லாம்
முழுஆண்டு விடுமு றையில்
இன்பமாய் இங்கு வந்தே
இருப்பீர்கள் வழக்க மாக!

இம்முறை மட்டும் நீங்கள்
ஏன் வர வில்லை? நானும்
வெம்சிறை யில்இ ருந்தால்
விளையாட ஆளா யில்லை?
அம்மும்மா, சித்தி, மாமா,
அன்புப்பெரி யம்மா, மொய்ம்பன்
செம்மலும் கதிர்நி றையும்
சேர்ந்தாட உள்ளார் அன்றோ?

எப்பொழு தென்னை இங்கே
விடுதலை செய்வார் என்றே
இப்போது தெரிய வில்லை.
இருந்தாலும் நீங்கள் எல்லாம்
அப்பா வோடுமம்மா வோடும்
வந்திங்கே அனைவ ரோடும்
எப்போது பள்ளி உண்டோ
அதுவரை இருந்து போங்கள்.

-1993
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/210&oldid=1447023" இலிருந்து மீள்விக்கப்பட்டது