பக்கம்:கனிச்சாறு 7.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  173


131

அறுபது பொங்கல்!


(அறுபது அகவைக் கிழவி, தன் பெயர்த்தியிடம் சொல்கிறாள்.)

நீண்ட சுருட்குழல் சேல்விழி மேவியென்
நெஞ்சை யிழுத்திடும் பாவையே,
ஆண்டுக் கொருமுறை பொங்கல் வந்தே, உளத்
தாக்கிய கூத்தினைக் கேளடி! 1

பொங்கல் பிறக்குமுன் நான்பிறந் தேன்எனப்
பெற்றவர் என்னிடம் சொல்லியே,
பொங்கி மகிழ்ந்து மகிழ்ந்தத னால்,இரு
பொங்கல் கழிந்தது வல்லியே! 2

மூன்று கழிந்தது; நான்கு கழிந்ததென்
முல்லைப்பல் கண்டு மகிழ்ந்தனர்;
ஆன்று சிறந்த தமிழ்மொழி யை, என்றன்
அன்னை எனக்கறி வித்தனள். 3

பள்ளியிற் குந்தினேன்! ஐந்தெனப் பொங்கல்
பறந்தோடி வந்ததே! ஆறினில்,
துள்ளி மகிழ்வுட னாடுதற்கே என்றன்
தோழிகளும் உடன் சேர்ந்தனர்! 4

சிற்றில் கட்டி விளையாடி மகிழ்வெய்திச்
செம்மலர் ஊஞ்சலில் உந்தியும்.
நெற்றி சுழித்திரு நீள்விழி யால், இசை
நேருக்கு நேராக ஆடியும், 5

பூத்த மலர்க்கொம்பை எட்டிப் பிடித்தற்குப்
புன்னை யிலையடி தாவியும்,
கோத்த மலர்ச்சர மிட்டிரு பெண்களைக்
காதலர் ஆக்கியும் ஆடிட, 6

பத்தும் இரண்டும் பறந்து, பதின்மூன்றிற்
பாதியும் தீர்ந்ததப் போதிலே
பத்தரை மாற்றுப் பொன் மேனியென, எனைப்
பார்த்தவர் கூறிடக் கூசினேன்! 7

அன்றொரு பொங்கலில், ஆறுசென்றேன்; மக்கள்
ஆட்டினை மாட்டினை மூழ்க்கியே,
நன்று கழுவிய வாறிருந்தார்; கண்டு
நின்றிருந்தேன்; எனை நோக்கியே, 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/218&oldid=1447034" இலிருந்து மீள்விக்கப்பட்டது